வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சுழல்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக தீபக் சாஹர், குணால் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. மூன்று டி20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அங்கு விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கு கிறது. முன்னதாக அயர்லாந்துடன் நடந்த இரண்டு டி20 போட்டிகளில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் நீக்கப்பட்டுள்ளனர்.
அயர்லாந்துடன் நடந்த முதல் டி20 போட்டிக்கு முன்பாக நடந்த பயிற்சியின் போது வாஷிங்டன் சுந்தர் காலில் காயம் அடைந்தார். அவரால் நடக்க முடியவில்லை. காயம் அதிகமானதால் அவர் இந்தியா திரும்புகிறார். அவருக்குப் பதிலாக டி20 போட்டிக்கு குணால் பாண்ட்யாவும் ஒரு நாள் போட்டிக்கு அக்சர் பட்டேலும் சேர்க்கப்படுகிறார்கள். இருவரும் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடும் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அயர்லாந்துடன் நடந்த முதல் டி20 போட்டியின் போது இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் அவர் டி20 தொடரில் பங்கேற்ற மாற்றார். ஆனால் ஒரு நாள் போட்டித் தொடருக்குள் அவர் குணமாகிவிடுவார் என்று கூறப்படுகிறது. டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசும் பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவுதான்.
இவருக்குப் பதிலாக, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சாஹர் சேர்க்கப் பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்