Published : 30,Jun 2018 08:58 AM

சுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்

safari-park-lion-hugging-and-KISSING-tourists-as-kids-sit-inches-away-

சுற்றுலாப் பயணிகளை சிங்கம் ஒன்று கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ரஷ்யாவில் உள்ள பூங்கா ஒன்றை திறந்தவெளி ஜீப்பில் ஒரு குடும்பத்தினர் சுற்றிப் பார்த்தனர். சிங்கம் இருக்கும் பகுதியில் சென்றபோது, மூன்று வயதான சிங்கம் ஒன்று அந்தச் சுற்றுலாப் பயணிகளை நெருங்கியது. பின்னர் காரில் அமர்ந்திருந்த சிறுமியையும், பெண்ணையும் நெருங்கியது. ஆனால், பூங்காவின் காப்பாளர் சிங்கத்தை சாந்தப்படுத்தினார். ஜீப்பில் அமர்ந்திருந்த மற்றொருவரை அந்தச் சிங்கம் கட்டியணைத்தது முத்தம் கொடுத்தது. இதனை அவரது குடும்பத்தினர் செல்போனில் பதிவு செய்தனர். சுற்றுலாப் பயணிகளை சிங்கம் முத்தம் கொடுக்கும் நம்பமுடியாத மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இணையங்களில் வைரலாகியுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்