அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’படத்தின் வெளியீடு அடுத்த வருஷம் பொங்கலுக்கு தள்ளிப் போக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘விசுவாசம்’. இவரது இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வருகிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களை அடுத்து இவர் அஜித்தை வைத்து ‘விசுவாசம்’ படத்தை எடுத்து வருகிறார். இந்த நான்கு படங்களின் தலைப்பின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில் ‘வி’என வருவதை போல இயக்குநர் திட்டமிட்டு வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்கே சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பை முழுவதுமாக முடித்திருக்கிறது படக்குழு. இந்தப் படத்தின் பூஜையின் போதே ‘தீபாவளி ரிலீஸ்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் இடையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்ததால் மொத்த சினிமா துறையும் முடங்கியது. அதனால் திட்டமிட்டபட்டி ‘விசுவாசம்’ வேகம் எடுக்கவில்லை.
இந்நிலையில் விஜய்யின் ‘சர்கார்’, சூர்யாவின் ‘என்ஜிகே’ திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. அதனால் அஜித்தின் ‘விசுவாசம்’ வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளிப் போடலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்தி கசிந்து வருகிறது. ஆனால் இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி