நீதிபதிகளின் காலி பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு நீதித்துறையை பலவீனபடுத்துவதாகவும், நீதித்துறைய நேரடியாக சிதைக்கவோ, முடக்கவோ, தடுக்கவோ முடியாமல் புது வித்தையை கையாண்டு வருவதாகவும் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர்களுக்கான சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் சின்னராஜூ தலைமை தாங்கினார். இதில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ’வழக்கறிஞர்கள் அரசியல் சார்ந்து இருக்கலாம், ஆனால் வழக்கறிஞர் சங்கம் அரசியல் சார்ந்து இருக்கக் கூடாது’ என்றார். ’ஆசியாவில் சுதந்திரத்திற்கு பிறகு ஜனநாயக முறைப்படி உள்ள நாடு இந்தியாதான். நீதிமன்றங்களை சிதைக்கவோ, முடக்கவோ, தடுக்கவோ, நேரடியாக யாராலும் முடியாது. ஆனால் புதுவித்தையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன’ என்றார்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு நீதித்துறையை பலவீனப்படுத்துகிறது. அரசு, காலியாக உள்ள பணியடங்களை தெரிந்தும் தெரியாமல் உள்ளது என்றார்.
’உச்சநீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது, உயர்நீதிமன்றத்தில் 409 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள நீதிமன்றங்களில் 5 ஆயிரத்து 746 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது’ என்று கூறிய அவர், நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல்வேறு முக்கிய வழக்குகள் இதுவரை தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்குகளை விரைவில் முடிக்காமல் இருக்கவே நீதிபதிகளின் பணியிடங்களை அரசு நிரப்பாமல் உள்ளது என்று கூறிய அவர், நீதிபதிகள் மறைமுகமாக எச்சரிக்கையிட்டு மிரட்டப்படுவதால் தான் இளம் வழக்கறிஞர்கள் நீதிபதியாக வர அச்சப்படுகின்றனர் என்றார்.
நீதித்துறையின் சுதந்திரம்தான் தனி மனிதனின் பாதுகாப்பு. நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லையென்றால், தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை. நீதிபதிகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளை பாதுகாக்கும் பொறுப்பும், சுதந்திரமாக செயல்பட வைக்கும் பொறுப்பும் வழக்கறிஞர்களுக்கு உண்டு என்றார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் நேரடியாக தேர்வு செய்வதுபோல, நீதித்துறையிலும் இந்தியன் ஜூடிசியல் சர்வீஸ் முறையில் நீதிபதிகளை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நீதிபதிகளுக்கு 2 ஆண்டுகள் கடுமையான பயிற்சி அளித்து, அவர்களை மாவட்ட நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், தொடர்ந்து பணி மூப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்த முறையை கடைப்பிடித்தால் நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் குறையும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 40 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளன என்றும் கூறினார்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!