[X] Close

நாக் அவுட்டில் வெளியேறப்போவது யார்?

World-Cup-Football-Knockout-Stage

உலக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று தொடங்கும் நாக் அவுட் சுற்றில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.

21ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. நாக் அவுட்டில் நடைபெறும் முதல் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி கஸான் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல் மற்றொரு போட்டியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த உருகுவே அணி, பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது. பிஸ்ட் மைதானத்தில் இரவு 11.30 மணிக்கு இவ்விரு அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியடையும் அணிகள் வெளியேற்றப்படும் என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close