அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. டப்ளின் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல்.ராகுல், கேப்டன் விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
விராட் கோலி வந்த வேகத்தில் 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அப்போது இந்திய அணி 2.4 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்தது. 9 ரன்னில் கோலி ஆட்டமிழந்ததால் 2000 ரன்கள் எனும் மைல்கல்லை இந்தப் போட்டியிலும் அவரால் எட்ட முடியாமல் போனது. 17 ரன்கள் எடுத்திருந்தால் அவர் இந்த மைல்கல்லை எட்டியிருப்பார்.
இதனையடுத்து 3வது வீரராக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். கேஎல்.ராகுலும், ரெய்னாவும் அயர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். கேஎல்.ராகுல் சிக்ஸர்களாக விளாசினார். 28 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் தொடர்ந்து அதிரடி காட்டினார். ரெய்னாவும் கேஎல்.ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
அதிரடியாக விளையாடி வந்த கேஎல்.ராகுல் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஓ’ப்ரெயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 12.1 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தது. கேஎல்.ராகுலை தொடர்ந்து அதே ஓவரில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரெய்னாவும் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஓ’ப்ரெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அதேபோல், கடைசி ஓவரிலும் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்தார். ஹர்திக் பாண்ட்யா கடை கட்டத்தில் 9 பந்துகளில் 32 ரன்கள் குவிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் கெவின் ஓ’ப்ரெயின் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். முதல் டி20 போட்டியிலும் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தது.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்