Published : 29,Jun 2018 07:25 AM

மதுவுக்கு அடிமையானவன் மனைவி, குழந்தைகளை விற்க முயன்ற அவலம்

Drunken-Man--who-tried-to-sell-the-Family-Members

 

ஆந்திராவில் மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்க முயற்சித்தவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொவளகுண்டா பகுதியை சேர்ந்த மத்திலெட்டி - வெங்கடம்மா தம்பதிக்கு ‌நான்கு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். மத்திலெட்டி மது‌விற்கு அடிமையாகி அதிக அளவில் கடன் வாங்கியதால், கடந்த ஆண்டு தனக்கு பிறந்த குழந்தையை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளதால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த வெங்கடம்மா, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் வழக்கு‌ப்பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர்.