கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: தடைக்குப் பின் கலக்கிய ஸ்மித்!

கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: தடைக்குப் பின் கலக்கிய ஸ்மித்!
கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: தடைக்குப் பின் கலக்கிய ஸ்மித்!

கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான டொரெண்டோ நேஷ னல் அணி அபார வெற்றி பெற்றது.

 குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடர் கனடாவில் நடக்கிறது. இதில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், பிராவோ, ஷமி உட்பட பலர் விளையாடுகின்றனர். ஐந்து அணிகள் கொண்ட இந்த லீக் தொடரின் முதல் போட்டி கிங் சிட்டியில் நேற்று நடந்தது.

இதில், ஷமி தலைமையிலான டொராண்டோ நேஷனல்ஸ் அணியும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. பந்தை சேதப்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றபின் முதல் முதலாக களமிறங்கினார் ஸ்மித். டாஸ் வென்ற அவர், முதலில் ஃபீல் டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய வான்கூவர் நைட்ஸின் கிறிஸ் கெயிலும் எவின் லெவிஸூம் களமிறங்கினர். இருவ ரும் அதிரடியில் ஈடுபட்டனர்.

12 பந்தில் 17 ரன் எடுத்திருந்த நிலையில் கெய்ல் நடையை கட்ட, வால்டன் வந்தார். அவர் 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வாண்டர் டுசென் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரு ரஸலும் லெவிஸும் மிரட்டத்த் தொடங்கினர். லெவிஸ் 55 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதில் பத்து சிக்சர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். ரஸல் இருபது பந்தில் 54 ரன்கள் சேர்க்கவும் அந்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.

பின்னர் 228 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் ரொடண்டோ நேஷனல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் சார்லஸ் 30 ரன்னிடலும் நிஷாகட் கான் 6 ரன்னிலும் அவுட் ஆக, ஸ்மித் அபாரமாகவும் பொறுப்பாகவும் ஆடினார். 41 பந்தில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பின்னர் வந்த ஆண்டன் டேவிச் 44 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென் றார். இதனால் 19.2 ஓவர்களிலேயே 231 ரன்கள் எடுத்து அந்த அணி அபார வெற்றி பெற்றது. 92 ரன்கள் விளாசிய டேவிச் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com