[X] Close

ஐரிஷ் கிரிக்கெட் படையுடன் இந்திய அணி இன்று மோதல் !

Will-go-in-with-belief-that-we-can-beat-India--Ireland-captain-Gary-Wilson

ஐயர்லாந்து கிரிக்கெட் அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று விளையாடுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா - அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. ஐயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு அண்மையில்தான் ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தது. 


Advertisement

இதனையடுத்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் ஐயர்லாந்து கிரிக்கெட் அணி பங்கேற்று வருகிறது. அண்மையில் பாகிஸ்தானுடனான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் பங்கேற்கிறார். ஐயர்லாந்து அணியின் கேப்டன் கேரி வில்சன் "கிரிக்கெட்டில் எந்த அணியையும் தோற்கடிக்கலாம், இந்த விளையாட்டின் அழகே இதுதான்" என நம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொள்கிறார்.


Advertisement

இந்திய அணியில் மறுபிரவேசம் செய்துள்ள சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறது. இதில் இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.


Advertisement

Advertisement
[X] Close