மெஸ்ஸி இன்று சாதிப்பாரா ? சொதப்புவாரா ?

மெஸ்ஸி இன்று சாதிப்பாரா ? சொதப்புவாரா ?
மெஸ்ஸி இன்று சாதிப்பாரா ? சொதப்புவாரா ?

ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் மிக முக்கியமான நாளாக இன்று பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் நாளாக இன்றைய தினத்தை கருதலாம். அர்ஜென்டினா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நைஜீரியாவுடன் இன்று மோதுகிறது. இரண்டு முறை சாம்பியனான ஆர்ஜென்டினா குரூப் டி பிரிவில் ஐஸ்லாந்துடன் நடந்த ஆட்டத்தில் டிரா கண்டது. அதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை வீணாக்கியது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. பின்னர் குரோஷியாவுடன் நடந்த ஆட்டத்தில் 0-3 என படுதோல்வி அடைந்தது.

இதனால் நாக் அவுட் சுற்றுக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதே நேரத்தில் குரோஷியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி விட்டது. ஐஸ்லாந்தை வென்று நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. ஐஸ்லாந்தும், ஆர்ஜென்டீனாவும் 1 புள்ளியுடன் உள்ளன. அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை நைஜீரியாவுடன் நடக்கும் ஆட்டத்தில் ஆர்ஜென்டினா கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் குரோஷியாவுடன் நடைபெறும் ஆட்டத்தில் ஐஸ்லாந்து தோல்வியடைய வேண்டும்.

எனினும் குரோஷிய அணியில் முக்கியமான 6 வீரர்களுக்கு "யெல்லோ கார்டு" கொடுக்கப்பட்டுள்ளதால், அடுத்தக் கட்ட வீரர்கள்தான் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குரோஷியா தோல்வியடைந்தால் ஆர்ஜென்டினாவின் நிலை மேலும் சிக்கலாகிவிடும். எனினும் கோல் சராசரி அடிப்படையில் ஆர்ஜென்டீனாவுக்கு வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் நைஜீரியாவை வென்றுள்ளது ஆர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com