Published : 25,Jun 2018 03:08 PM

தோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்து தொடரில் எட்டும் புதிய மைல்கல் 

Indian-Team-players-Approaching-Milestone-Dhoni--Kohli-to-reach-10-thousand-runs

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவை.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி உடனான ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக தோனி எட்டிவிடுவார் என்று எதிர்ப்பார்த்த 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை இந்தத் தொடரில் எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் 33 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் தோனி 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார். இந்திய அணியைப் பொருத்தவரை ஏற்கனவே சச்சின்(18,426), கங்குலி(11,363), டிராவிட்(10,889) ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை 4வது வீரராக 10 ஆயிரம் ரன்களை எட்டவுள்ளார். அதேபோல், சர்வதேச அளவில் 12வது வீரராக அவர் இந்த மைல்கல்லை எட்டவுள்ளார். தோனிக்கு அடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி 9,588 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.

இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் எட்டவுள்ள சில மைல்கல்கள்:-

1. தோனி 10 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 33 ரன்கள் தேவை
2. விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை எட்ட 412 ரன்கள் தேவை
3. டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்ட கோலிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவை
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்ட ரோகித் சர்மாவுக்கு இன்னும் 75 ரன்கள் தேவை
5. டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்ட ரோகித் சர்மாவுக்கு இன்னும் 148 ரன்கள் தேவை
6. ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எட்ட 406 ரன்கள் இன்னும் தேவை 
7. 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்ட புவனேஸ்வர் குமாருக்கு 14 விக்கெட்டுகள் மட்டுமே தேவை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்