மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் பிள்ளை வேண்டும் என்பதற்காக, 10 மாத ஆண் குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்கா பாத் மாவட்டம் பைதங்கேதா கிராமத்தைச் சேர்ந்தவர் வேதிகா எரண்டே. இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 10 மாத குழந்தை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய குழந்தையை யாரேனும் கடத்தி இருக்க வாய்ப்புள்ளதாக அந்தப் புகாரில் தாய் வேதிகா தெரிவித்திருந்தார். ஆனால், புகார் அளித்த சில மணி நேரங்களிலே, போலீஸ் மோப்ப நாய் வேதிகா வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் டேங் ஒன்றில் இருந்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்தது.
இதனையடுத்து, குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பிட்கின் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பண்டிட் சோனவானே வேதிகா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் அளித்த பதில்கள் சோனவானேக்கு திருப்தியாக இல்லை. இதனையடுத்து, தாய் வேதிகாவிடம் அவர் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, தனது 10 மாத குழந்தையை கொன்றதை வேதிகா ஒப்புக் கொண்டுள்ளார்.
வேதிகாவுக்கு ஏற்கனே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறக்கும் என்று நினைத்திருந்த நிலையில், ஆண் குழந்தை பிறந்ததால் அவர் விரக்தியடைந்தார். பின்னர், 10 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்