Published : 21,Mar 2017 05:18 AM
இரட்டை இலை சின்னம் யாருக்கு?: நாளை விசாரணை

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது.
இதில் சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களைத் தெரிவிக்கவுள்ளனர். பிறகு இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் மீதான பரிசீலனைக்குப் பின், வரும் 27ம் தேதி வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். ஆகையால், அதற்கு முன்னதாகவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இரட்டை சிலை சின்னம் முடக்கப்பட்டால், சசிகலா அணியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலான வேட்பாளர் மதுசூதனனுக்கும் வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.