Published : 25,Jun 2018 06:58 AM

கடைக்கு போக எல்லாம் நேரம் இல்ல: அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங்

Online-Shopping-Increased-in-Recent-Days

வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகளை ஆன்லைன் மூலம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அசோசெம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் போன்றவற்றை இணையதளம் வழியாக வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இணையதளம் வழியாக 10 கோடியே 80 லட்சம் பேர் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும் சாதனங்களையும் வாங்கியுள்ளனர். இந்த ஆண்டிலும் இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தாண்டு 12 கோடி பேர் இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவார்கள் என்று அசோசெம் மற்றும் ரீ சர்ஜன்ட் அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்குவோரில் 65 சதவிகிதம் பேர் செல்போனில் ஆர்டர் செய்பவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இணையதளம் வழியாக பொருட்களை வாங்கியவர்களில் 74 சதவிகிதம் பேர், பொருள் கிடைத்தவுடன் பணம் செலுத்தும் வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்