[X] Close

கொலை, கொள்ளை, போதை: தாதாவாகும் விளையாட்டு வீரர்கள், தவிக்கும் போலீசார்!

Why-many-sportsmen-in-Punjab--Haryana-are-turning-to-crime-

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தேசிய அளவில் பங்குபெற்று விளையாட்டுகளில் விருது வாங்கிய சிலரை தாதாவாக பார்த்தால் எப்படியி ருக்கும்? அப்படித்தான் உறைந்து போயிருக்கிறது பஞ்சாப் மற்றும் ஹரியானா போலீஸ்!


Advertisement

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஹர்ஜிந்தர் சிங் என்ற விக்கி கவுண்டரை என்கவுன்டரில் போட்டுத்தள்ளியது பஞ்சாப் போலீஸ்! பிரபல ரவுடி யான இந்த விக்கி, பாட்டியாலாவில் உள்ள மத்திய சிறையில் தாக்குதல் நடத்தி இரண்டு தீவிரவாதிகளையும் ரவுடிகளையும் மீட்டுக் கொண்டு சென்ற சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவர்.

இந்த விக்கி, வட்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் பங்கேற்றவர். ஜலந்தரில் உள்ள அரசு விளையாட்டுக் கல்லூரியில் படித்த இவருக்கு அங்கு நண்பர் ஆனார் லவ்லி பாபா. இவர், மற்றொரு விளையாட்டு வீரரான பிரேமா லஹோரியாவை விக்கிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மூன்று பேரும் தோஸ்த் ஆனார்கள். இவர்களுக்கு ஜலந்தரில் உள்ள என்.ஆர்.ஐ குடும்பத்தைச் சேர்ந்த சுகா கல்வான் அறிமுகமானார். நட்பாக இருந்த இவர்களுக்குள் ஈகோ தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் கல்வான், பாபாவை கொன்றுவிட, நண்பனை கொன்றவனை பழிவாங்க முடிவெடுத்தார்கள் விக்கியும் லஹோரியாவும். 


Advertisement

(கல்வான்)

இதற்காக சேரா குபான் என்ற ரவுடி கூட்டத்தில் ஐக்கியமானார்கள். கடந்த 2014-ல் பக்வாரா என்ற இடத்துக்கு அருகே, நினைத்தபடி கல்வானை போட்டுத் தள்ளினார்கள். கொன்றதோடு, அவன் உடலைச் சுற்றி நடனம் ஆடி மகிழ்ந்திருக்கிறார்கள். இங்கிருந்து அதிகரித்திருக்கிறது விக்கி யின் கிரிமினல் ஆட்டம். இதைத் தொடர்ந்துதான் என் கவுண்டரில் கொன்றிருக்கிறது போலீஸ்!


Advertisement

இவனைத் தொடர்ந்து இன்னும் சில தாதாக்கள், போலீஸ் வலையில் சிக்கியிருக்கிறார்கள். விசாரித்தால் அவர்களும் விளையாட்டு வீரர்கள்தான். அதில் இரண்டு பேரில் ஒருவர் சம்பத் நெஹ்ரா மற்றொருவர் ராகேஷ் மோக்ரியா. இதில் சம்பத் தேசிய அளவில் பங்கேற்ற டெக்கத்லான் அத்லெட். ராகேஷ் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர். மேலும் ஜஸ்விந்தர் ராக்கி, ராகேஷ் மாலிக், ஷானி தேவ் என்ற குகி என தாதாக்களை பட்டியலை விரித்தால் இவர்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள்தான்.

பஞ்சாப் போலீஸில் மோஸ்ட்வான்டட் லிஸ்டில் இருக்கும் தாதா, ஜெய்பால் சிங் புல்லார், ஈட்டி எறிதலில் தேசிய அளவில் பங்கேற்றவர்.

ஹரியானாவைச் சேர்ந்த ராகேஷ் மாலிக் என்ற ரவுடி மல்யுத்த வீரராக இருந்தவர். கிட்னி பிரச்னை காரணமாக தனது முதல் காதலான மல்யுத்தை விட்டுவிட்டு துப்பாக்கி தூக்கியிருக்கிறார். சாராய கான்ட்ராக்டரைக் கொன்றதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் இப்போது.

(ஜக்தீஷ் போலோ)

மல்யுத்த போட்டியில் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி மெடல்களை வாங்கிய ஜக்திஷ் போலா (56)வுக்கு அர்ஜூனா விருதை வழங்கியது மத்திய அரசு. பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பி பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அவர்.

பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டிராத் தில்வான் (35) கபடி வீரர். மாநில அளவில் பங்கேற்றிருக்கிறார். 

ஹரியான மாநில கபடி அணியின் கேப்டனாக இரண்டு முறை இருந்திருக்கிற ஷானி தேவ் என்கிற குகி பல்வேறு கொலைகளுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு கொலை வழக்கில் இவரை தவறாகச் சேர்த்துவிட, அதில் இருந்து கபடியை விட்டுவிட்டு முழுநேர கொலை தொழிலுக்குள் இறங்கிவிட்டார் குகி. தேவேந்தர் காலா தலைமையிலான ரவுடி கூட்டம், குகியின் தம்பியை சுட்டுக்கொன்று விட, அதற்கு பழி வாங்க காலா கூட்டத்தில் பலரை கொன்று குவித்திருக்கும் குகி, 2016-ல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் இப்போது.

(சம்பத் நெஹ்ரா)

’விளையாட்டு வீரர்கள் ஏன் இப்படி கிரிமினல்களாக மாறுகிறார்கள்?’ என்று மனநல மருத்துவர் டிஜே சிங்கிடம் கேட்டால், ‘அதற்கென்று தனிப் பட்ட காரணங்கள் ஏதும் இருக்க முடியாது. அவர்கள் ஆக்ரோஷமாக இருக்க கூடியவர்கள். விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் அதில் தோற்றாலோ, அல்லது அவர்கள் கவனம் திசைத் திருப்பப்பட்டாலோ விரக்தி அடைந் துவிடுகிறார் கள். அதில் இருந்து மாறிவிடுகிறார்கள்’ என்கிறார்.

விளையாட்டை நேசித்து அதில் சாதிக்கத்துடித்த இவர்கள் இந்த குற்றச் செயல்களுக்குள் நுழைந்தது எப்படி என்கிற ஆச்சரியம் காவல்துறைக் கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே இருக்கிறது!


Advertisement

Advertisement
[X] Close