[X] Close

நாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி

Germany---s-World-Cup-Is-Saved-in-the-Blink-of-an-Eye

 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடனுக்கு எதிரான போட்டியில், கடைசி நிமிட கோலால் ஜெர்மனி அணி திரில் வெற்றி பெற்றது. 

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்த நடப்புச் சாம்பியனான ஜெர்மனி, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சுவீடனை எதிர்கொண்டது. சோச்சியில் உள்ள பிஸ்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் 32ஆவது நிமிடத்தில் சுவீடன் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ரியஸ் (REUS) பதில் கோல் அடித்து சமன் செய்‌தார். போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், டோனி குரோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து ஜெர்மனி அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணி, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்தது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close