
ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதலமைச்சராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும், எந்த ஒரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே திமுக எடுக்கும் என்றும் கூறியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ள நிலையில் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.