Published : 23,Jun 2018 09:39 AM

விவசாயிகளுக்கு பிரத்யேக வாட்ஸ் அப் குழு : மாவட்ட ஆட்சியர்

District-Collector-Introduce-Whatsapp-Group-for-farmers

வேலூர் மாவட்ட விவசாயிகளின் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணும் முயற்சியாக விவசாயிகளுக்கென புதிய வாட்ஸ் அப் குழுவை மாவட்ட ஆட்சியர் துவங்கியுள்ளார். 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் குறைகளை தெரியபடுத்தவும் அவர்களுக்கு உடனடி தீர்வுக் காணும் முயற்சியாக வேலூர் FARMERS GROUP என்ற வாட்ஸ் அப் குழுவை வேலூர் மாவட்ட ஆட்சியர் துவங்கியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறும் போது வேலூர் FARMERS குழுவில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளை இணைத்து அவர்களுக்கு அன்றாட தேவை என்ன என்பதை கேட்டுவருகிறோம். அதில் விவசாயிகள் கேட்கும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்கப்படும். இக்குழுவில் விவசாயத்துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலை துறை என அனைத்து துறை அலுவலர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தினமும் வனிலை குறித்தும் இதில் பதிவு செய்யப்படுகிறது.

இது வேலூர் மாவட்ட விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இக்குழு தொடங்கப்பட்டதன் மூலம் அதிகாரிகளை இனி விவசாயிகள் தேடிசெல்லவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்தில் இருந்தே சந்தேகங்களையும் புகார்களையும் தெரிவிக்கலாம். இதனால் விவசாயிகளின் அலைச்சல் குறையும். ஒரே குழுவில் பொது வெளியிலும் தகவல் பகிரப்படுவதால் உடனடி தீர்வு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் இக்குழுவில் இருப்பதால் விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுட்டிக்காட்டுதல் மூலம் உடனடி பதில் கிடைக்கிறது. மேலும் நேரடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு தங்கள் குறைகளுக்கான தகவல்கள் சென்றடைகிறது என்றும் விவசாயிகள் கூறிகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்