
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடுவதற்காக இன்று புறப்படுகிறது.
அங்கு அயர்லாந்து அணியுடன் 27, 29 ஆம் தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. தொடர்ந்து, இங்கிலாந்து அணியுடன் ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்காக டெல்லியில் இருந்து இந்திய அணி இன்று இங்கிலாந்து செல்கிறது.
இதற்கிடையே, அணியில் இணைந்து கொள்வதற்காக கேப்டன் விராத் கோலி, மும்பையில் இருந்து நேற்று டெல்லி சென்றார். அவரை வழியனுப்ப, மும்பை விமான நிலையத்துக்கு வந்தார், அவர் மனைவி அனுஷ்கா சர்மா. பிரிய மனமில்லாமல் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தனர். பின்னர் கட்டியணைத்துக் கொண்டனர். இது இரண்டு மாதங்களுக்கும் மேலான தொடர் என்பதால் நீண்ட நேரம் பேசி சிரித்தபடி இருந்தனர். இதை விமான நிலையத்தில் இருந்தவர்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் புகைப்படங்கள் இங்கே: