இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது.
இங்கிலாந்தின் டெர்பியில் நடந்த இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இந்திய ஏ அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது.
பயிற்சி ஆட்டங்களில் கலக்கிய இந்திய ஏ அணி, இந்தப் போட்டியிலும் கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் தடுமாறியது. 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும் ரிஷப் பன்ட் 64 ரன்களும் சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக் குப்பின்ஸ் அபாரமாக ஆடி 128 ரன்கள் குவித்தார். ஷாம் கெயின் 54 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டையும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்