நெல்லையில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசுவின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பகுதி பெரும்பாலும் ஆள்நடமாட்டம் இன்றி காணப்படும். ஆற்றில் செடிக்கொடிகள் அடர்ந்து காணப்படும் பகுதியில் ஏதோ மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் சிசு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த 108 ஊழியர்கள் சிசுவை கைப்பற்றி பரிசோதித்தனர். சிசு இறந்து கிடப்பதை அறிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசுவைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை ஆற்றில் வீசப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'