
தமிழகத்திற்கான வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான உயர்நிலைக் குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் மத்திய வேளாண்துறை பிரதிநிதிகள் கடந்த 16ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான உயர்மட்டக் குழுவைக் கூட்டவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் கடிதம் எழுதினார். இதே போல் விவசாயக் கடன்களை கட்டும்படி நிர்பந்திக்கவேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லிக்கும் ராதா மோகன் சிங் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து வறட்சி நிவாரணத்திற்கான உயர்மட்டக்குழு வரும் 23ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.