[X] Close

ஆக்ரோஷ மோதலில் ஆண், பெண் புலி: வைரலாகும் வீடியோ

Male-and-female-tiger-fight-over-prey-in-rare-display

ராஜஸ்தான் தேசிய பூங்காவில் இரண்டு புலிகள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
ராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது சவாய் மதோபூர் மாவட்டம். இதன் அருகில் உள்ள ரன்தம்போர் தேசிய பூங்கா புகழ்பெற்றது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தப் பூங்காவில் புலிகள், சிறுத்தைகள், மான்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தப் பூங்காவில், ஆண்புலியும் பெண்புலியும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. இதை வனவிலங்கு ஆர்வலரும், புலி நிபுணருமான திண்டார் கோதா என்பவர் வீடியாவாக எடுத்து வெளியிட்டுள்ளார். 


Advertisement

இந்தக் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close