[X] Close

இங்கிலாந்து தொடரில் இந்தியா சாதிக்கும்: கும்ப்ளே

Anil-Kumble-confident-of-Team-India-s-chances-on-England-tour

‘இங்கிலாந்து தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாதிக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கூறினார். 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளிலும் தொடர்ந்து, இங்கிலாந்து அணியுடன் ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக டெல்லியில் இருந்து இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனில் கும்ப்ளே, ‘இங்கிலாந்தில் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட் அணி, இப்போது சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங் என ஆல்ரவுண்ட் அணியாகவும் அனுபவம் வாயந்த அணியாகவும் இருக்கிறது. வீரர்களில் பலர் குறைந்தது 50 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் நன்றாக விளையாடுவார்கள். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வது இது முதன்முறையல்ல. அதனால் அங்கு ள்ள சூழ்நிலை நம் வீரர்களுக்கு நன்றாகத் தெரியும். நமது அணியில் உலகின் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். மணிக்கட்டைப் பயன் படுத்தி பந்துவீசும் ஸ்பின்னர்கள் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் தொடரை வெல்ல நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.


Advertisement

Advertisement
[X] Close