
அரியலூர் நந்தினி கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதான விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் நந்தினியின் தாயார் ராஜகிளி தனது மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார். மேலும், தாமதமாக வழக்கு பதிவு செய்ததற்காக இரும்புலிக்குறிச்சி சிறப்பு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மற்றும் அரியலூர் மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, நந்தினி தாயாரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு கூறி வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.