[X] Close

“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்

photographer-g-venkatram-interview

ஆவரேஜ் ஆனா ஹீரோயினைக்கூட ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கொண்டு வந்துவிடுகிறார் ஜி.வெட்கட்ராம். தமிழ் சினிமா இண்டரஸ்ட்ரியில் ஃபேமஸ் போட்டோகிராஃபர். இவர் பிரதமர் மோடியையே தனியாக வைத்து புகைப்படம் எடுத்தவர். சினிமா வட்டம் தாண்டி மோடியின் பார்வையே இவர் பக்கம் திருப்பியது ஆச்சர்யம். பல வருடங்களாக முன்னணி புகைப்படக் கலைஞராக வலம் வரும் அவரை சந்தித்தோம்.

மோடி வாய்ப்பு எப்படி வந்தது? 

“ஒரு பத்திரிகைக்காக மோடியை பேட்டி எடுக்க இருந்தாங்க. அந்தப் பேட்டிக்காக என்னை படம் எடுக்க முடியுமானு கேட்டாங்க. நான் மட்டுமல்ல, இந்தியாவே மோடியை உத்து கவனிச்ச நேரம். குஜராத்ல அவர் ஏற்படுத்துன மாற்றங்கள் அவரை கவனிக்க வச்சிருந்தது. நானும் அவரோட செயல்பாடுகளை கவனிச்சு வந்தேன். வந்த வாய்ப்பை பத்தி யோசிக்காம உடனே சம்மதம் சொல்லிட்டேன். பேட்டிக்கும் படம் எடுப்பதற்கும் சேர்த்து முக்கால் மணி நேரம்தான் அபாயிண்ட்மெண்ட். குஜராத்ல இருக்குற அவரோட வீட்டுக்கே போயிருந்தோம். வீட்டுக்குள்ள இருந்த ஹாலில் இண்டர்வியூவ் எடுத்தோம். 


Advertisement

ஹாலில் இருந்த லைட்ஸ் அவ்வளவா வெளிச்சமில்லை. அவர் அப்ப உடுத்தியிருந்த உடையும் அந்த லைட் வெளிச்சத்தில் எடுபடல. நான் ரெண்டு மூணு படங்கள் எடுத்தேன். சரியா வரல. அப்படியே உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் கழித்து வெளியில போய் பார்த்தேன். வீட்ல இருந்த கார்டன் அழகா இருந்தது. உடனே மோடியின் உதவியாளர்கள் ‘என்ன நீங்க படம் எடுக்கலையா?’னு கேட்டாங்க. நான் ‘லைட்டிங் சரியா செட் ஆகல சார். மோடியின் உடை வேற இருந்தா நல்லா இருக்கும். கார்டன்ல வச்சு ஷூட் பண்ணா அழகா வரும். அரேஜ் பண்ண முடியுமா?’னு கேட்டேன். நேரம் இருக்குமானு தெரியலையேனு தயங்கினாங்க. உடனே மோடியே வந்து  ‘என்ன ப்ராப்ளம்?’னு கேட்டார். விளக்கினேன். ‘அவ்வளவுதானே? என் வார்ட்ரோப் போய் பாருங்க. நீங்களே எந்த உடை சரியா வரும்னு செலக்ட் பண்ணுங்க. நான் உங்க விருப்பப்படி கார்டனுக்கே வந்திடுறேன்’னு சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

அவர் கொடுத்த உரிமையில் வார்ட்ரோப் போய் பார்த்து நானே நாலஞ்சு உடைகளை செலக்ட் பண்ணேன். எல்லாம் காட்டன் உடை. ஏறக்குறைய கதர் ஆடை மாதிரியான வகை துணிகளைதான் அவர் உடுத்துகிறார். அந்த உடைகள் அரசியல்வாதிகளிலேயே அவருக்கு தனித்த அடையாளத்தை கொடுக்குற மாதிரியான உடையா இருந்தது. நான் அவர்கிட்ட சகஜமா சில கேள்விகளை கேட்டேன். ‘நீங்க எப்படி உங்க உடைகளை தேர்வு பண்றீங்க?’னு கேட்டேன். 


Advertisement

‘ஏன் அப்படி கேட்குறீங்க?’னு கேட்டவர்,  “இல்ல வழக்கமா அரசியல்வாதிகள்னா ஒயிட் அண்ட் ஒயிட் உடுத்துவாங்க. கலர் செலக்ஷன்ல அதிகம் கவனம் செலுத்தமாட்டாங்க. நீங்க எடுப்பான சைலண்ட் கலர்ல மேட்சா உடைகளை செலக்ட் பண்றீங்க..அதான் கேட்டேன்’னு சொன்னேன். அவர் சந்தோஷமா, ‘மக்கள் முன்னால நம்மல எப்படி ப்ரசண்ட் பண்றோம் என்பது முக்கியம். நம்ம மைண்ட் திங்கிங் எப்படியிருக்கு என்பதை ஒருத்தருக்கு முதல்ல பேசி புரியவைக்க முடியாது. அத உணர்த்துவதைபோல உடைகள் இருந்தா நம்மை பற்றி பாதி முன்கூட்டியே புரிஞ்சிடும்’னு சொன்னவர் ‘என்னோட காஸ்டியூம் டிசைனர் சிலர் ஐடியா கொடுப்பாங்க. அதுல நான் எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துப்பேன்’னு சொன்னார். 

ஒரு நாட்டின் பிரதமர் உடை விஷயத்துல இவ்வளவு தெளிவா இருக்காருனு அவரோட வார்ட்ரோப்பை பார்த்ததுமே புரிஞ்சிக்கிட்டேன்.  அவர் உடைகளை அலசிப் பார்த்ததில் ஒருவிஷயம் புரிஞ்சது. எல்லா உடைகளும் இந்திய தேசிய அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில்தான் அதிகம் இருந்தன. மோடியை படம் எடுக்கும் வாய்ப்பு முதல்ல வந்தப்ப சின்ன தயக்கம் இருந்தது. அவர் மீது தேசிய அளவில் ஒரு நெகடிவ் பார்வை உருவாக்கப்பட்டிருந்தது. அந்தத் தயக்கத்துடன்தான் போனேன். ஆனா அவர் கொடுத்த சுதந்திரம் என்னை ரொம்ப ஈர்த்தது. எளிமையாக பழகினார். நட்பா போட்டோகிராஃப் எடுக்க ஒத்துழைத்தார்” 

இந்திய அரசியல்வாதிகளில் போட்டோகிராஃபிக்கு சரியான முகம் கொண்டவர்கள் என நீங்கள் யாரை சொல்லுவீங்க?

“ஹாஹாஹா.. நிச்சயம் இந்திராகாந்தியை சொல்லுவேன். அந்த காட்டன் புடவை, பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் இருக்கும் ஹேர்ஸ்டைல், இம்ப்ரஸான முகம், அவருடைய சுறுசுறுப்பு, வேகம் எல்லாவற்றையும் நான் சின்ன வயசுலேயே டிவியில பார்த்திருக்கேன். வெரி போல்ட் பொலிடிஷன்” 

சினிமாட்டோகிராஃபர் ஆசையிலதான் இந்தத் துறைக்கு வந்தீங்க..அப்புறம் ஏன் தயக்கம்?

“இஞ்ஜினியரிங்கை விட்டுவிட்டு நான் சினிமாவுல கேமிராமேன் ஆகணும்ங்குற ஆசையிலதான் வந்தேன். அப்படியே போட்டோகிராஃபியிலயே காலம் என்ன இழுத்துக்கிட்டு போயிடுச்சு. இந்த ஃபீல்டுக்கு வந்த பின்னாடிதான் தெரிஞ்சது, போட்டோகிராஃபி என்பது சிம்பிளான விஷயம் இல்ல. இந்தத் துறையிலேயே பல வெரைடிஸ் இருக்கு. லிக்கியூட் போட்டோகிராஃபி, ஃபேஷன் போட்டோகிராஃபி, எத்தினிக் போட்டோகிராஃபி, ஆட்டோமொபைல் ஃபோட்டோகிராஃபி, ஃபுட் போட்டோகிராஃபி, ஜூவல்ஸ் போட்டோகிராஃபி என்று பல இருக்கு. எந்தத் தொழில்லயும் இதோட முடிஞ்சி போச்சுனு நினைச்சா நாம காலி. மாறிமாறி வளர்ந்துகிட்டே இருக்கணும். உண்மையா சொன்னா இந்த வேலைக்கு முடிவேயில்ல. என்னைவிட நல்ல சினிமாட்டோகிராஃபர்ஸ் நிறையபேர் இருக்காங்க. நான் போய்தான் சினிமாவை காப்பத்தணும்னு இல்ல. அப்படி வர்ற காலத்துல அங்க போகலாம்னு விட்டுட்டேன்”

தனிப்பட்ட முறையில் நீங்க பல நாளா போட்டோ ஷூட் பண்ணணும்னு ஆசைப்படும் ஆட்கள் யாராவது இருக்காங்களா?

“இல்ல. யாரா இருந்தாலும் நாம எடுக்குற படத்தை நல்லா எடுக்கணும்; அதான் என் திட்டம். மற்றபடி பர்சனாலிடி பார்த்து நான் படம் எடுப்பவன் கிடையாது. நம்மை நம்பி வர்றவங்களை அழகா காட்டணும், அதான் முக்கியம். நாம எடுத்த படத்தை அவங்க பார்த்த பிறகு அவங்க கண்ணுல ஒரு சந்தோஷம் தெரியணும். பல வருஷத்துக்கு முன்னாடி டெய்லி பேப்பர்ல ஒரு விளம்பரம் பார்த்தேன். மாடலுக்கு பின்னாடி நிற்குற ஒரு பொண்ணு அழகா தெரிஞ்சாங்க. உடனே அந்த விளம்பரம் எடுத்தவங்களுக்கு போன் பண்ணி விசாரிச்சேன். ‘படத்துல இருக்குற முக்கியமான மாடலை தேடிப்பிடிக்குறதே கஷ்டம், உங்களுக்கு பின்னாடி இருக்குறவங்க வேணுமா?’னு தயங்கம் காட்டினாங்க. இருந்தும் தேடிப் பிடிச்சேன். அந்தப் பெண்னை கூப்பிட்டு வந்து தனியா போட்டோ எடுத்தேன். அதுக்கு பிறகு அவங்களுக்கு நிறைய ஆஃபர்ஸ் வந்தது. அவங்க சினிமாவுல பெரிய ஆக்டராவே ஆனாங்க. அவங்க யாரு தெரியுமா? சமந்தா” மிக இயல்பாக பேசுகிறார் வெங்கட்ராம்.

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

 


Advertisement

Advertisement
[X] Close