Published : 20,Mar 2017 11:07 AM
பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி வேண்டுகோள்

இளையராஜா பாடல்கள் காப்புரிமை விவகாரம் இசையுலகில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரச்னையை பெரிதுபடுத்தவேண்டாம் என இசைப்பிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் எஸ்பி பாலசுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காப்புரிமை விவகாரம் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், கடவுளின் படைப்பில் அனைவரும் நல்லவர்கள் சமமானவர்கள் என்றும் எஸ்பி பாலசுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார்.