இஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு

இஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு
இஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ மின்வாரிய ஊழியரை தொடர்பு கொண்டு மின் திருட்டு தொடர்பாக இஸ்ஸாமியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சஞ்சய் குப்தா மின் வாரிய ஊழியர் ஒருவரிடம் உரையாடிய ஆடியோ பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பாஜக எம்எல்ஏ சஞ்சய் குப்தா கடந்த 15ஆம் தேதி அம்மாநில மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர் அவினாஷ் சிங் என்பவரை போனில் அழைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து இதுவரை எத்தனை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவியுங்கள். பணிமாறுதல் பெற்றுக்கொண்டு செல்வதால் நீங்கள் உங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாது. உத்தரப்பிரதேசத்தில் எங்காவது ஒரு இடத்தில் தான் இருப்பீர்கள். இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்கு செல்லுங்கள் மின் திருட்டு அங்கு எப்படி நடைபெறுகிறது என பாருங்கள்.  நான் உன்னையும் உனது துறையை குறித்தும் லக்னோவில் பேசிக் கொள்கிறேன். இந்துக்கள் மட்டும் தொழிலதிபர்களை நீங்கள் குறிவைத்து  தாக்குகிறீர்கள் என ஆக்ரோஷமாக பேசியுள்ளார். தொலைபேசி உரையாடலை பதிவு செய்த அந்த பொறியாளர் அதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது.

இதுகுறித்து சஞ்சய் குப்தாவிடம் பேசியபோது,  “மின்வாரிய ஊழியர்கள் ஒரு தலைப்பட்சமாக நடத்து கொள்ளவேண்டாம் என்று தான் கூறினேன். மின் வாரிய ஊழியர்கள் இந்துக்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்ததை வரவேற்கிறேன். இஸ்லாமியர்கள் இல்லத்துக்கும் செல்லுங்கள் என்று தான் கூறினேன். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்?” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com