Published : 18,Jun 2018 01:37 PM

‘ஈரம்’ இயக்குநர் காமினேஷனில் நயன்தாரா

Nayanthara---s-film-with-Arivazhagan-is-on-the-cards

இயக்குநர் அறிவழகன் இயக்க உள்ள திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை நயன்தாரா ‘லக்ஷ்மி’ குறும்பட இயக்குநர் சர்ஜுன் கே.எம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அதனை அடுத்து அவர் அறிவழகன் எடுக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். 

‘ஈரம்’, ‘குற்றம்24’ படங்கள் மூலம் தரமான இயக்குநர் பட்டியலில் தன் பெயரை தக்க வைத்துக் கொண்டவர் இயக்குநர் அறிவழகன். அவர் இயக்க போகும் திரைப்படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், அந்தக் கதையை கேட்ட அவர் ஒப்பந்தத்தில் கையெப்பம் இட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தினை எஸ்பி சினிமாஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

இந்தப் படங்களை தவிர்த்து ‘விசுவாசம்’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். மேலும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள தலைப்பிடாத படத்தில் இரண்டாவது முறையாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏற்கெனவே நெல்சன் திலிப்குமார் இயக்கி உள்ள  ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்