Published : 18,Jun 2018 01:24 PM

சிங்கத்தை தொட்டு ரசித்த வேதிகா: வைரல் வீடியோ

actress-vedhika-viral-video

நடிகை வேதிகா தான் மேற்கொண்ட சாகச விஷயங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ படத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றவர் வேதிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி எழுதினர். ஆனாலும் அவருக்கு அதிக வாய்ப்புக்களை தமிழ் சினிமா வழங்கவில்லை. ஆகவே அவர் தெலுங்கு பக்கம் போய் தனது வேலையை பார்க்க தொடங்கினார். 

இந்நிலையில் வேதிகா மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே உள்ள 350 மீட்டர் கம்பி பாலத்தில் நடந்து தனது முதல் சாகசத்தை அரங்கேற்றியுள்ளார். அதனை அடுத்து அவர் செய்த அடுத்த சாகசம் தான் செம த்ரில். அதாவது மொரீஷியஸில் உள்ள மிருக காட்சி சாலைக்கு சென்ற வேதிகா அங்குள்ள சிங்கங்களை தொட்டு பார்த்து மிக இயல்பாக பழகியுள்ளார். அதுவும் அதன் அருகிலேயே அமர்ந்து அதனை தடவியும் கொடுத்துள்ளார். அதற்கான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் மிக அழகான வானில் தோன்றிய வானவில் வீடியோவையும் தட்டிவிட்டிருக்கிறார். இந்த வீடியோக்களை அவரது ரசிகர்கள் அதிகம் விரும்பி வேகமாக பரப்பி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்