[X] Close

கணவரின் லட்சியத்தை நினைவாக்கிய ‘காடுகளின் தாய்’

A-Odisha-Woman-Secure-a-Forest-for-her-Husband

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அரியவகை மரங்களை அழிவிலிருந்து காத்து வருகிறார். 

ஒடிஷா மாநிலம் ருகூடிபீடா கிராமத்தில் வசிக்கும் பென்கோ போலி என்ற பெண்மணி அரியவகை மரங்களை பாதுகாத்துவருகிறார். 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் தாக்கூர்முண்டா மாவட்டத்தில் உள்ள ருகூடிபிடா பகுதியில் பல்வேறு வகையான பயனுள்ள மரங்களை மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் முற்றிலும் அழித்த நிலையில், பென்கோ போலியின் கணவர் ருத்ரா காடுகளை பாதுகாக்க பல்வேறு முயிற்சியில் ஈடுபட்டார். 


Advertisement

இந்நிலையில் அவர் இறந்துபோகவே, கணவன் விட்டுச் சென்ற பணியை பென்கோ போலி தொடர்ந்தார். சால் எனப்படும் மரத்தின் ஒரேஒரு கன்று மட்டுமே எஞ்சிய நிலையில், பென்கோ போலி அதை பாதுகாத்து 100க்கும் மேற்பட்ட மரங்களை உருவாக்கியுள்ளார். ‘காடுகளின் தாய்’ (MOTHER OF JUNGLE) என்று அழைக்கப்படும் பென்கோ போலி, பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி ஒற்றைப் பெண்மணியாக மரங்களை காக்க போராடி வருகிறார்.
 


Advertisement

Advertisement
[X] Close