Published : 17,Jun 2018 08:43 AM

29 வயது ஆணுக்கும் 15 வயது குழந்தைக்கும் திருமணம்? :தடுத்த நிறுத்திய சைல்டு லைன்

Child-Marriage-stopped-near-Ramanathapuram

ராமநாதபுரத்தில் இன்று காலை நடைபெற இருந்த 3 குழந்தை திருமணங்களை ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே கரைமேல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் விஸ்வநாதன்(வயது26) என்பவருக்கும் நயினார் கோவிலை சேர்ந்த 12-வது வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் இன்று காலை அங்குள்ள உச்சநத்தி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் பரமக்குடி அருகே எலந்தைக்குளத்தைச் சேர்ந்த செல்லமுத்து (வயது28) என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த 16 வயது குழந்தைக்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

அதேபோல ஏர்வாடி வெட்டன்மனையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது29) என்பவருக்கும் ஏர்வாடி தர்கா பகுதியை சேர்ந்த 15 வயது குழந்தைக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. இது குறித்த தகவல் ராமநாதபுரம் சைல்டுலைன் அமைப்பினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சைல்டு நல அமைப்பினர் மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் குணசேகரி தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருமணம் நடைபெறவிருந்த பெண்கள் அனைவரும் குழந்தைகள் என தெரிய வந்தது. இந்தக் குழந்தைக்கு திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். தொடர்ந்து சைல்டுலைன் அமைப்பினர் குழந்தைகளை அழைத்து வந்து குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து திருமணத்தை நிறுத்துவதாக தெரிவித்தனர். விசாரணைக்குப்பின் குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்