[X] Close

’எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’: மனைவிகள் மீது கணவர்கள் புகார்!

Husband-bashing-is-on-rise-in-Uttar-Pradesh

சினிமாவில் மட்டுமே பார்த்து சிரித்துவிட்டுப் போகிற சம்பவங்கள் சில நேரம் நிஜத்திலும் நடந்து விடுகின்றன. கணவன் டார்ச்சர் தாங்காமல் மனைவிகள் கொடுக்கும் புகார்கள் பற்றிதான் அதிகம் கேள்விபட்டிருப்போம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் அப்படியே தலைகீழ்!

மனைவிகளின் அடிகளைத் தாங்க முடியாமல் கணவர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகிறதாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு! இதை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறார்கள் போலீஸ்காரர்கள்.


Advertisement

‘உண்மைதான். மாசத்துக்கு இதுமாதிரி பத்து, பதினைஞ்சு புகார் வந்திருது. அவசர சேவை நம்பர் நூறுக்கு போன் பண்ணியும் சொல்றாங்க. ’ரொம்ப அடிக்கிறாங்க. உடல்ரீதியா அதிகமா துன்புறுத்தப்படறோம், எப்படியாவது காப்பாத்துங்க’ன்னு கதறுறாங்க’ என்கிறார் மாவட்ட போலீஸ் அதிகாரி ராதே ஷ்யாம் மவுரியா.

இதுபோன்று மனைவிகள் புகார் செய்தால் வீட்டு வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வார்கள். அந்தப் பிரிவிலேயே இதையும் பதி வு செய்கிறார்கள். வீட்டு வன்முறை சட்டம் பெண்களுக்கானது என்றே நம்பப்படுகிறது. ஆனால் ஆண்களின் புகாரும் இந்தப் பிரிவில்தான் பதிவு செய்யப்படுகிறது.


Advertisement

(வடிவேலு-கோவை சரளா படங்கள், சும்மா)

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ’கணவர்கள் கொடுக்கும் புகார்கள்ல நிறைய பேர் எஃப்.ஐ.ஆர் போட வேண்டாம்னு சொல்லிட றாங்க. ஏன்னா அவங்களுக்கு அவமானமாம். மனைவிட்ட அடி வாங்கியது வெளியே தெரிஞ்சா மற்றவங்க கிண்டலா பேசுவாங்கன்னு பயப் படறாங்க. மனைவியை கடுமையா மிரட்டிட்டு விட்டுருங்க, போதும்’னு சொல்றாங்க’ என்கிறார்.

லக்னோவில் உள்ள பதி பரிவார் கல்யாண் சமிதி என்ற அமைப்பு, மனைவிகளால் பாதிக்கப்படும் கணவர்களின் உரிமைக்காக ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் இந்து சுபாஷ் கூறும்போது, ‘குடும்பங்கள்ல பெண்கள் கொடுமைப்படுத்தப் படுறாங்கன்னு சொல்றது  தவறானது.

கூட்டுக் குடும்பத்துல வாழ்ந்த காலம் முடிஞ்சுடுச்சு. கணவனை மட்டுமே பெண் சார்ந்து இல்லை. பொருளாதார ரீதியா பெண்கள் சுதந் திரமா இருக்கிறாங்க. போலீஸ் மற்றும் நிர்வாகங்களில் பெண்களுக்கு ஆதரவான நிலைதான் இருக்குது. இதனால ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க. அதிகமா தற்கொலைக்கும் தள்ளப்படுறாங்க’ என்கிறார்.
 

Related Tags : Uttar Pradeshhusbandwifeகணவன்மனைவி

Advertisement

Advertisement
[X] Close