[X] Close

உலகக் கோப்பை கால்பந்து: பெருவை வீழ்த்தி டென்மார்க் அசத்தல்

FIFA-World-Cup-2018--Denmark-beat-Peru-1-0

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிக்கான சி' பிரிவில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி டென்மார்க் வெற்றி பெற்றது. 


Advertisement

மோர்டோவியா அரேனா மைதானத்தில் பெருவிற்கும், டென்மார்க்கிற்கும் இடையே இப்போட்டி நடைபெற்றது. டென்மார்க் அணியில் நட்சத் திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சனும், பெருவில் அதன் கேப்டன் பாவ்லோ கியுரோவும் பக்கபலமாக உள்ளனர். 


Advertisement

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தன. டென்மார்க் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் பலமுறை கோல் அடிக்க முயற்சித்தும் முடியாமல் போனது. பெரு வீரர் கிறிஸ்டியன் அடித்த பந்து, கோல் கம்பத்துக்கு மேலே சென் றது. போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே எந்த கோலும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் 59ஆவது நிமிடத்தில் டென் மார்க் அணியைச் சேர்ந்த யூசப் போல்சேன் என்பவர் கோல் அடித்தார். 

குரூப் 'சி' தரவரிசைப் பட்டியலில் மூன்று புள்ளிகளைப் பெற்று, இரண்டாவது இடத்தில் டென்மார்க் உள்ளது.


 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close