“காதலிக்கிறாயா..? இல்லையா..? சிறுமியின் கன்னத்தில் அறைந்த 'சைக்கோ' இளைஞன்

“காதலிக்கிறாயா..? இல்லையா..? சிறுமியின் கன்னத்தில் அறைந்த 'சைக்கோ' இளைஞன்
“காதலிக்கிறாயா..? இல்லையா..? சிறுமியின்  கன்னத்தில் அறைந்த 'சைக்கோ' இளைஞன்

திருவண்ணாமலை அருகே சிறுமியை வழிமறித்த இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது17. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தையல் பயற்சி பள்ளிக்கு சென்ற பின் உஷா சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செய்யாறு செல்வ விநாயகர் கோயில் குளக்கரை தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ரஞ்சித் (வயது 22) உஷாவை சைக்கிளோடு வழிமறித்துள்ளார். எனவே ரஞ்சித்தை தட்டிவிட்டு உஷா கடக்க முயன்றிருக்கிறார். ஆனால்  நின்ற இடத்தை விட்டு உஷா நகர்ந்து போக முடியாத அளவிற்கு வழிமறித்து ‘ உன்னிடம் ஒன்றுபேச வேண்டும்’ என சொல்லியிருக்கிறார் ரஞ்சித். ஆனால் உஷாவோ ரஞ்சித்தை கண்டுகொள்ளவில்லை. பின்னர் வழிமறித்தப்படியே அவரின் கையை பிடித்து இழுத்த ரஞ்சித் ‘ என்னை காதலிக்கிறாயா..? இல்லையா..?” என கேட்டிருக்கிறார். உஷா ஏதும் சொல்லாத நிலையில் தன்னை காதலிக்கும்படியும் உஷாவை வற்புறுத்தியிருக்கிறார் ரஞ்சித். வைத்தியர் தெருவில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அப்போது நான் உன்னை காதலிக்கவில்லை என உஷா கூறியிருக்கிறார். எனவே ஆத்திரத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே உஷாவின் கன்னத்தில் அறைந்திருக்கிறார் ரஞ்சித்.

இதனைக் கண்ட அங்கு நின்றவர்கள் ஓடிச் சென்று ரஞ்சித்தை தடுக்க பார்த்திருக்கின்றனர். உடனே அவர்களை பார்த்து நீங்கள் இதனை தடுக்க நினைத்தால் உங்களையும் கொலை செய்து விடுவேன் என பொதுமக்களையும் பார்த்து மிரட்டியிருக்கிறார் ரஞ்சித். பின்னர் அவரிடம் இருந்து ஒருவழியாக மீண்டு வந்த உஷா, செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து ஒன்று விடாமல் கூறி புகார் கொடுத்துள்ளார். புகாரை அடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் அவர் மேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com