[X] Close

தீபாவளிக்கு வெளியாகும் ‘தளபதி62’?

Vijay-starrer----Thalapathy-62----to-release-on-Diwali-

இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தளபதி62’ வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ அல்டிமேட் ஹிட்டை தழுவியது. விஜய்யின் சினிமா கேரியரில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாகவே அமைந்தது. அதனை அடுத்து ‘கத்தி’யில் நடித்தார். அந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளால் தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு எதிர்ப்பை சம்பாதித்தது. அதன் பிறகு இந்தக் கூட்டணி எப்போது இணையும் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதனை அடுத்து ஏ.ஆர். முருகதாஸின் ‘தளபதி62’ இணைந்தார்.  முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி62’ படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. விஜய் தனது கையால் க்ளாப் அடித்து படத்தின் பூஜையையும் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இருவரும் பங்கேற்ற படக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இந்நிலையில் இப் படத்தை படக்குழு இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே சூர்யாவின் ‘என்ஜிகே’ வெளியாகும் என அந்தப் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் விஜய்யும் களத்தில் குதித்துள்ளார். ஆனால் இந்தத் தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close