டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கும் 90 சதவிகித மானியத்துடன் 50 கோடி ரூபாய் செலவில் மொத்தம் ஆயிரம் சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மைக்காக இந்த ஆண்டு 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன முறை அமைக்கப்படும் என்றும் இதற்காக விவசாயிகளுக்கு மானியமாக 27 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் ஒவ்வொரு மையத்திலும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர் என தெரிவித்தார்.
உதகையில் தற்போது செயல்பட்டு வரும் தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருதை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி எனும் புதிய பூங்கா 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என கூறினார். கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, அடுத்த ஆண்டு பொங்கல் முதல் ஜூன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Loading More post
ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix