[X] Close

சதத்தை நோக்கி முரளி விஜய்: மழையால் தடை பட்டது போட்டி!

India-v-Afghanistan--Match-delayed-by-rain

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டி மழை காரணமாகத் தடைபட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்ப தால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.


Advertisement

அதன்படி தொடக்க ஆட்டக்காரரக்ளாக முரளி விஜய்யும் ஷிகர்தவானும் களமிறங்கினர். அதிரடியாக, ஒருநாள் போட்டி போல ஆடினார் ஷிகர் தவான். அவர் 96 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்த நிலையில் முமகது நபி பந்தில் அவுட் ஆனார். அடுத்து கே.எல்.ராகுல் வந்தார். முரளி விஜய் பொறுமையாக ஆட, ராகுல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். ஆப்கானின் சுழல் பந்துவீச்சாளர்கள் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் பந்துகளை தவானும் ராகுலும் நொறுக்கினர்.

இந்நிலையில் மதியம் 1.31 மணியளவில், இந்திய அணி 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருந்த போது மழைக்குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. முரளி விஜயும் ராகுலும் களத்தில் உள்ளனர். முரளி விஜய் 94 ரன்களுடன் சத்தை எதிர்நோக்கி உள்ளார். ராகுல் 33 ரன்கள் எடுத் துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close