[X] Close

4 வருடத்துக்குப் பிறகு நஸ்ரியா: தியாகத்தைப் புகழும் கணவர்!

Fahad-praises-Nazriya-for-sacrificing-4-years-for-family

குறுகிய காலமே வந்தாலும் சில ஹீரோயின்களை மறக்கவே முடியாது. அவர்களது நடிப்பு அப்படியொரு அசைவை ஏற்படுத்தியிருக்கும். அதில் ஒருவர் நஸ்ரியா! நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என தமிழில் அவர் நடித்தப் படங்கள் குறைவு என்றாலும் நஸ்ரியாவுக்கான வரவேற்பு இங்கு அதிகம்! அந்த ஆரவார வரவேற்புக்கிடையிலேயே திருமண வாழ்க்கைக்குள் திடீரென விழுந்தார்! நடிகர் பஹத் பாசிலை கடந்த 2014 ஆகஸ்ட்டில் திருமணம் செய்த கையோடு, நடிப்புக்கு குட்பை சொன்னார். 

நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறார் நஸ்ரியா. ’பெங்களூர் டேஸ்’ படத்தை இயக்கிய அஞ்சலி மேனன், ’கூடே’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். பிருத்விராஜ், பார்வதி மேனனுடன் நஸ்ரியாவுக்கும் முக்கிய வேடம் இதில். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியி டப்பட்டது. 


Advertisement

அதை ட்விட்டரில் டேக் செய்துள்ள நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில், ’ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும்போது, இதுபோன்ற உற்சாகத்தை என் வாழ்க்கையில் இதற்குமுன் பார்த்ததில்லை. அதற்கு காரணம், நான்கு வருடத்துக்குப் பின் என் காதலுக்குரியவர் நடிக்கும் படத்தை பார்க்கப் போகிறேன் என்பதுதான். நஸ்ரியா குடும்பத்துக்காக தனது மதிப்புமிக்க நான்கு வருடத்தை தியாகம் செய்திருக்கிறார். ஐ லவ் யூ நஸ்ரியா!’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள நஸ்ரியா,’கூடே’ எனக்கு ஸ்பெஷல் படம்’ என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close