Published : 13,Jun 2018 12:30 PM

நயன்தாராவை இயக்கும் ‘லக்ஷ்மி’ குறும்பட இயக்குநர்

Nayanthara---s-next-with-Sarjun-goes-on-the-floors

‘லக்ஷ்மி’ குறும்பட இயக்குநர் படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் நடிகை நயன்தாரா. அஜித்துடன் ‘விசுவாசம்’ படப்பிடிப்பில் தற்போது பிசியாக இருக்கிறார். அடுத்த எந்தப் படத்தில் ஒப்பந்தம் ஆவார் என எதிர்பார்ப்பு நிலவியது.  ‘லக்ஷ்மி’ குறும்பட இயக்குநர் படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காக படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதுதான் சினிமா வட்டாரத்தில் டாக் ஆப் த நியூஸ். நயன், சர்ஜூன் கேஎம் இயக்கப் போகும் இந்தப் படத்தின் கதை ஹாரர் மற்றும் த்ரில்லர் கலந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் சர்ஜுன் மணிரத்னம் மற்றும் முருகதாஸ் இருவர்களிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அதைவிட ஹைலைட்ஸ் யுடியூப்பில் வைரலான ‘லக்ஷ்மி’ மற்றும் ‘மா’ குறும்படத்தின் இயக்குநர். 


படத்தை ராஜேஷின் கேஜேஆர் ஸ்டியோ தயாரிக்க உள்ளது. இதில் நடிக்க உள்ள மற்ற திரைநட்சத்திரங்களை முடிவு செய்து வருகிறது படக்குழு. படத்தின் படப்பிடிப்புக்களை முடித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். நயன்தாராவின் 63வது படமாக இந்தப் படம் அமைய உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்