பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கோல்ட்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் முக்கியமானவர் அக்சய் குமார். நல்ல கதையம்சம் கொண்ட பாத்திரங்களை தேடி நடித்து வரும் அக்சய் குமார், பேட்மேன் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரிப்பது என்ற காதாபாத்திரத்தில் தத்ரூபமாக தன் நடிப்பை வெளிபடுத்தி இருந்த அக்சய், தமிழில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கும் படத்தின் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுயிருகிறார்.
ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அக்சய் குமார், நாகினி சீரியல் புகழ் மவுனி ராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதை பின்னணியாக வைத்து இயக்குனர் ரீமா கக்தி திரைப்படமாக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் முதல் போஸ்டரை படத்தின் நாயகன் அக்சய் குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!