ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூரிவில் தொடங்குகிறது. ஆப்கான் அணிக்கு டெஸ்ட் போட்டி அந்தஸ்தை ஐசிசி வழங்கியப் பின்பு, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி. இதனையடுத்து இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆனால், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கணக்குப்படி முரளி விஜய்யும், ஷிகர் தவாணும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். அதற்கடுத்தப்படியாக புஜாராவும், கோலியின் இடத்தில் ரஹானேவும், அதற்கடுத்து கருண் நாயரும், தினேஷ் கார்த்திக்கும் களமிறக்கப்படுவார்கள். அதன் பின்பு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
இதன் பின்பு பவுலர்கள் வரிசையை பார்க்கலாம் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் இந்த மூவரில் யாரேனும் இருவர் அணியில் இடம் பெறுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர், அறிமுக வீரர் சைனி, உமேஷ் யாதவ் நால்வரில் மூன்று பேருக்கோ அல்லது இரண்டு பேருக்கோ வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி மட்டும்தான் என்பதால் புது முகங்களுக்கான வாய்ப்பு அதிகமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?