[X] Close

பேருந்தின் டயர் வெடித்து விபத்து: சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

Bus-accident-near-theni

தேனி அருகே தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. ஆனால் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும்
அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தேனியிலிருந்து மதுரை நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பயணித்தது. பேருந்து உசிலம்பட்டி அருகே
கருமாத்தூர் என்ற இடத்தில் வந்தபோது தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்த
பயணிகள் அலறியடித்தனர். ஆனால் சற்றும் பதறாத ஓட்டுநர் பேருந்தை சாதுர்யமாக இயக்கினார்.


Advertisement

பின்னர் பேருந்தை கவிழ விடாதப்படி காட்டுப்பகுதியில் இறக்கியதால் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ஆனாலும்
இவ்விபத்தில் வசந்தா மற்றும் மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. ஓட்டுநரின் சாதுர்யத்தால்
பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close