[X] Close

அடுத்த ஆண்டிற்கான +2 தேர்வுகள் மார்ச் ‌ஒன்றாம் தேதி தொடங்குகிறது

The-next-year--2-exams-start-on-March-1

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை இப்போதே அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 2019ஆம் ஆண்டு மார்ச் ‌ஒன்றாம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 19‌ம் தேதியுடன் நிறைவடையும் என்றும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதேபோல் பதினொன்றாம் வகுப்புக்கா‌ன பொதுத் தேர்வு மார்ச் ஆறாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதியுடன் பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வு முடியும் என்றும், தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 29‌ஆம் தேதி முடியும் என்றும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close