[X] Close

ட்ரம்ப் - கிம் ருசித்த உணவு வகைகள்

Donald-Trump---s-and-Kim-Jong-un---s-lunch


சிங்கப்பூரில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் மேற்கத்திய மற்றும் ஆசிய நாட்டு வகையைச் சேர்ந்த உணவுகளை ருசித்தனர். 

இரு தலைவர்களின் உணவு விருந்தில் அவகேடோ சாலட், பிரான் காக்டெய்ல், தேன் கலந்த மாங்காய் சாலட், ஓய்சன் எனப்படும் கடல் உயிரின உணவு சாலட் ஆகியவை பரிமாறப்பட்டன. முதன்மை விருந்தாக மாட்டு இறைச்சி, வேகவைத்த ப்ரோகோலி, வேகவைத்த உருளைக்கிழங்கு, ரெட் ஒயின் கலந்த சாஸ், அரிசி சாதம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் காய்கறிகள் கலந்த சிறப்பு குழம்பு தயாரிக்கப்பட்டிருந்தது. சில்லி சாசில் கலந்த வறுத்த மீனும் இதனுடன் இடம்பெற்றிருந்தது.


Advertisement

இந்த உணவுக்குப் பின்னர் இறுதியாக டார்க் சாக்லேட் தூவிய ஐஸ் கிரீம், செர்ரி பழங்கள் தூவப்பட்ட வெனிலா ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டது. இந்த உணவு விருந்தின் போது ட்ரம்ப்புடன் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அவரது தங்கை கிம் யோ ஜோங், வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யோங் ஹோ, கட்சியின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close