Published : 12,Jun 2018 02:43 AM

கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Heavy-Rain-Schools-Leave-today-in-Coimbatore

 

கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. காந்திபுரம், அவிநாசி சாலை, சூளூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  எனவே, பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை மாவட்ட மக்களின் கு‌டிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் 4ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகமாகக் கா‌ணப்படுகிறது. 

அதேபோல், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்