[X] Close

புதுமுக நடிகையாக அறிமுகமாகும் விஜி சந்திரசேகரின் மகள்

Viji---s-daughter--Lovelyn--is-the-female-lead-in-Lakshmy---s-next--

நடிகை விஜி சந்திரசேகரின் மகள் புதுமுக நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

‘ஆரோகணம்’,‘மதயானை கூட்டம்’ போன்ற படங்களில் நடித்தவர் விஜி சந்திரசேகர். ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிகாந்த்  தங்கையாக நடித்தவர் இவர். மிக நேர்த்தியான நடிப்பால் அதிகம் பேசப்பட்டவர். இவரது மகள் லவ்லின் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எடுக்க உள்ள புதிய திரைப்படத்தில் லவ்லின்  நடிக்க இருக்கிறார். இந்தப் படம் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்த  எடுக்கப்பட உள்ளது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த வாய்ப்பு குறித்து நடிகை விஜி, “நாங்க நல்ல கதைக்காக காத்திருந்தோம். என் மகள் படத்தை ஃபேஸ்புக்கில் போட்டிருந்தாள். அதை பார்த்துவிட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவரது புதிய படத்திற்கான கதாப்பாத்திரத்திற்கு இவள் சரியாக இருப்பாள் என்கிறார். ஆனால் எனது மகள் என்றதும் உடனே அவர் வாய்ப்பை கொடுத்துவிட வில்லை. ஆடிஷன் வைத்து  இவளது நடிப்பை பார்த்த பிறகுதான் தேர்வு செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close