
கர்நாடகாவில் 6 அமைச்சரவை இடங்களை விரைவில் நிரப்புவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அமைச்சரவை நிரப்புவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச உள்ளதாக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அமைச்சர் பதவியில் கிடைக்காதவர்கள் கடும் அதிருப்திக்கு இடையில் ஆதரவு எம்எல்ஏக்களுக்களுடன் ஆலோசிக தொடங்கியுள்ள நிலையில் கார்கேவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 இடங்களும் மஜதவுக்கு 12 இடங்களும் ஒதுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 இடங்களுக்கும் மஜதவிலிருந்து ஒரு இடத்திற்கும் இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. 6 இடங்களை நிரப்புவது மூலம் அதிருப்தியை பெருமளவு சமாளிக்க முடியும் என காங்கிரஸ் கட்சி தலைமை கருதுகிறது