Published : 09,Jun 2018 01:18 PM
சர்ச்சையை ஏற்படுத்திய ரேஹம் கான் புத்தகத்துக்கு நோட்டீஸ்

இம்ரான்கானின் முன்னாள் மனைவி எழுதிய புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் உட்பட 4 பேர்
நோட்டீஸ்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி எழுதிய புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இம்ரான்
கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் தமது சுயசரிதையை புத்தகமாக எழுதினார். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம்
மற்றும் அவரது மறைந்த மனைவி ஹூமா முஃப்தி இடையே இருந்த உறவு குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் தகவல்கள்
இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதே போல் ரேஹம் கானின் முன்னாள் கணவர் இஜாஸ் ரஹ்மான், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர், இம்ரான்கானின் பிடிஐ
கட்சியின் செய்திதொடர்பாளர் அனிலா கவாஜா உள்ளிட்டோர் குறித்தும் தவறான தகவல்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என
குற்றஞ்சாட்டி ரேஹம் கான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனையொட்டி இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க
வேண்டும் என லண்டனைச் சேர்ந்த சட்ட நிறுவனம் ரேஹம் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.