Published : 09,Jun 2018 11:57 AM

‘தளபதி 62’ படத்திற்கான ஒரு பாடல் ரெடி 

A-song-shoot-of-Vijay-s--Thalapathy-62--completed

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ‘தளபதி 62’படத்தில் வடிவமைத்துள்ள பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘மெர்சல்’ ப்ளாக்பாஸ்டர் ஹிட்டுக்கு அடுத்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 62’. இதனை ஏற்கனவே விஜய்யின் படங்களான ‘துப்பாக்கி’, ‘கத்தி’யை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு படலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கான புகைப்படம் ஒன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. ரஹ்மான், முருகதாஸ், மாஸ்டர் ஸ்ரீதர் இணைந்து எடுத்துக் கொண்ட அப்புகைப்படம் பாடல் காட்சிகள் படமாக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மாஸ்டர் ஸ்ரீதர் ஏற்கெனவே விஜய் படங்களான ‘போக்கிரி’ ‘வில்லு’ ‘ஜில்லா’, ‘துப்பாக்கி’, ‘தெறி’ படங்களுக்கு நடன வடிவமைப்பாளராக பணியாற்றியவர். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த விஜய் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சமூக கதையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியிருக்கிறார்.  விஜய்யின்‘பைரவா’ படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இதில் ராதா ரவி, பழ கருப்பையா, லிவிங்ஸ்டன், யோகிபாபு போன்றவர்கள் நடித்து வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்